தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலை காலை 11 மணி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி http://dge.tn.gov.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பிளஸ்டூ மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.