Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று காலை 9.25 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு மேலும் மூன்று லட்சம் கோவிஷில்டு தடுப்பூசி விமானத்தில் இன்று கொண்டு வரப்படுகிறது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு மருத்துவமனையாக மக்கள் அலை மோதிய நிலையில், இன்று காலை 9.25 மணிக்கு சென்னை கொண்டுவரப்படுகிறது. 3 லட்சம் டோஸ் கொண்டு வரப்படுகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |