தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்அடுத்தபட்டது. நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கை ஒருவாரத்திற்கு நீட்டித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 35 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 422 பேர் மரணமடைந்துள்ளனர். 25 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு, மரணம் குறைந்து வருவது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படி உள்ளது.