தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் இரண்டாம் தேதி முதல் கல்லூரிகள் செயல்படலாம் என்று அனுமதி அளித்திருந்தார்.
இதனை அடுத்து தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. கல்லூரிகளில் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளன. அதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.