தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து இன்று முதல் புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், டீக்கடைகள், நடைபாதை கடைகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு வேலைகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.