மத்திய அரசை கண்டித்து பல தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. இதனால் நேற்று பொதுப்போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையில் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் 90% (17,268) அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 98% மாநகர பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், வெளியூர் செல்லும் பேருந்துகள் 61% இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.