கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலம் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் கதிர்வீச்சு ஏற்படலாம் என கணிக்கப்பட்டதாலும், அவசர காலத்தின்போது மக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமம் என்பதாலும் 14 கிராமங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 கிராமங்களில் உள்ள நிலங்களின் சர்வே எண்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து வருகிறார். இந்த அரசாணையை திரும்ப பெற வில்லை என்றால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். உடனே இந்த அரசாணையை திரும்பப் பெற்ற மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்திரவாதம் வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.