தமிழகத்தில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மிக விரைவில் தேர்தல் நெருங்க இருப்பதால் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து திடீரென விலகிய அவர், தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீமான் எனக்கு தொகுதி ஒதுக்காததால் புதிய கட்சியை தொடங்கி உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.