தமிழகத்தில் 3வதாக உருவாகும் அணியின் முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் நல்ல காரணங்களுக்காக சமரசம் செய்ய தயார் என்று மக்கள் நீதி மையம் கட்சி பின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா பிறந்த நாளன்று சசிகலாவை சந்தித்த சரத்குமார், அன்று நடந்த ஆலோசனையில் அடிப்படையிலேயே மூன்றாவது அணி உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த கூட்டணிக்கு ஐந்துக்கு மேற்பட்ட கட்சிகள் வர உள்ளதாகவும், அதற்கு தினகரன் முதல்வர் வேட்பாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.