நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி வழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படலாம். கூட்டம் அதிகமாக உள்ள வரசந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை உள்ள இரவு நேர ஊரடங்கு நேரம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.