தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவின் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்க்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தற்போது ஊரடங்கை நீட்டிக்காவிட்டால் மக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியே செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் கொரோனா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம், அதன் காரணமாக மருத்துவ நிபுணர்கள் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
சற்றுமுன் தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அதன் அடிப்படையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது வரை கொரோனா ஸ்டேஜ் 2 ல் தான் இருக்கிறது. மூன்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில் உத்தரவு நீட்டிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது