தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்தும், திரையரங்குகள், மதுபான கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்பாடுகளுடன் திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.