தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில் திரையரங்குகளை திறப்பது, பள்ளிகள் திறப்பது, பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளது. ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.