தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளும் தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் / தேர்வுகள் மற்றும் work from home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் ஊரடங்கு முடியும் வரை மின் தடை இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பராமரிப்பு பணிக்காக மின் வாரியத்தால் தரப்படும் மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.