தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது,விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் ஊரங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. முழுமையாக கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனாவை வெல்வோம். நமக்கான வளம் வாய்ந்த தமிழகத்தை அமைப்போம் என அவர் கூறியுள்ளார்.