தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல்
ஆறாம் தேதி வரை பைக் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் பல இடங்களில் பைக்கில் பேரணியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஆறாம் தேதி வரை பைக் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. பைக் பேரணியாக சென்று வாக்காளர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து தேர்தல் நடக்கும் எந்த பகுதியிலும் தேர்தல் மற்றும் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாளில் பைக் பேரணி நடத்தப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையரின் உத்தரவை அரசியல் கட்சிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.