நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படாது என தொடர்ந்து அறிவிப்பு வெளியான நிலையில் கொரோன இரண்டாவது அலை பரவியதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.