தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.