Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு தலைமை செயலகத்தில் இருந்து விழிப்புணர்வு வீடியோவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் தமிழகத்தில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செவிலியர் ஒருவருக்கும், மதுரை, காஞ்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டு பேருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பலருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் வந்து சென்று உள்ளதா? என ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் தினந்தோறும் பாதிப்பு குறைந்து கொண்டு வருகின்றது. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பரிசோதனைக் கூடத்தை ரூ.2.30 கோடி செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |