ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடம் நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கரும்புகளை கொள்முதல் செய்யும்போது இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்படவேண்டும். ஒரு கரும்பு விலை அதிகபட்சம் 33 ரூபாய் ஆகும். மேலும் கரும்பு 6 அடிக்கு குறையாமலும், மெலிதாக இல்லாமலும் சராசரி தடிமனை விட கூடுதலாகவும் இருக்க வேண்டும்.