Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கண்டறியப்பட்டுள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர்,  தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை BA 4 கொரோனா வகை சென்றுவிட்டது. சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்துள்ளோம்.

புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை. ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட BA 4 கொரோனா தமிழகத்திலும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் BA 4 கொரோனா வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும் என்றார்.

ஏற்கனவே ஐதராபாத்தில் பரவிய நிலையில் தமிழகத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |