நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.
கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற சூழல் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.