தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.