தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பிஎட் கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக ஆண்டு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் உத்தரவின் படி பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.