தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற வடிவிலான போதை பொருட்களை தமிழகத்தில் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுவதாகவும், குட்கா பொருள்களை தயாரிக்க, விநியோகிக்க மற்றும் பதுக்கல் தடை விதித்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.