தூத்துக்குடி மாவட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரை எஸ்.ஐ பாலு திட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் எஸ்ஐ பாலு மீது சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். முருகவேலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ரவுடிகளின் அட்டூழியம் அளவு கடந்து நடந்து கொண்டிருக்கிறது. தங்களை கண்டிக்கும் போலீஸ் அதிகாரிகளையும் ரவுடிகள் தாக்கி வருவது வழக்கமாகிவிட்டது. இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியை கொன்ற கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.