தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.