தமிழகத்தில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 உடன் வேட்புமனு தாக்குதல் முடிவடைகிறது. இதனால் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கட்சிகள் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளும் வெளியாகி வருகிறது. பல கட்சிகள் அதிமுக மற்றும் திமுக விற்கு ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தமிழ் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அளிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு இரண்டு பேர் மட்டுமே வர அனுமதி. இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.