தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகரை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். 1991 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு தேசிய விருதும் பெற்றவர்.
Categories