Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டம் தொடக்கம்…. தொடங்கி வைத்த முதல்வர்….!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது.

இந்நிலையில் கோவின் செயலி இணையதளத்தில் முன்பதிவு செய்த சிறார்ர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மூலமாக சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். ஆகவே ஆதார் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி www.cowin.gov.in-ல் முன்பதிவு செய்யலாம்.

இதனிடையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தமிழகத்தில் 33.50 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Categories

Tech |