Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வாங்குவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டி இருப்பதால் டோக்கன் வழங்கும் தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |