Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜாதி பெயர்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்  7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தார், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவர். பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும். பட்டியலின சலுகைகள் தொடரும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது. அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |