தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதுமாக மே-10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் சில நாட்களாகவே பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மே-24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும். கடந்த இரண்டு வாரங்களில் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனால் ஜூன் வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.