Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன்-28 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ குழு பரிந்துரை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா அதிகரித்துள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரவும், 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |