தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதனால்ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 உயர்கல்வி நிறுவனங்களில் BCA, BBA, MBA, MSC, B.com உள்ளிட்ட 80 வகையான படிப்புகளை ஆன்லைனில் கற்க ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் பாடம் நடத்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ளது.