Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்தினம்  ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருப்பதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதுபானம் வாங்குவோர் தனிமனித இடைவேளையை பின்பற்றுகிறார்களா என பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |