தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற புதிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், தற்போது தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் ஐந்தாம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஜூலை 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. அருங்காட்சியங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது.