Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் டிசம்பர் 19 முதல்… ஊரடங்கில் அடுத்த தளர்வு… முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் முக்கிய தளர்வுகளை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து தமிழகத்தில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் திறந்தவெளியில் விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த அனுமதி அளித்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி 50 சதவீத பங்கேற்பாளர்கள் உடன் அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்தலாம். இதற்கு மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையர் இடமும் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |