தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலத்தை மேலும் ஆறு மாதம் (டிசம்பர் 31 வரை) நீட்டித்து சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என் நேரு, பெரியகருப்பன் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
செப் 15க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சட்ட மசோதா நாளை குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட உள்ளது.