ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் 100பேர் மறுகரையில் சிக்கி உள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Categories