Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தீவிர கட்டுப்பாடுகள்… ராஜீவ் ரஞ்சன் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஏற்கனவே தளர்வுகள் உடன்அமல் படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்ற தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்தொற்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கட்டாயம் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |