தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்கிறது.
இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். ஆனால் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்று முடிவு செய்கிறது. தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய இன்று காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் தேதி முடிவாகும். ஏப்ரல் கடைசி வாரத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.