Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக… புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று 2-வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, இன்று கடந்த 24 மணி நேரத்தில் 1,243 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,240, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த மூன்று பேருக்கு என 1,234 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,590 ஆகவும், 634 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,45,812 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |