தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். தற்போது அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வருகிறார். அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் என சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்படும். தள்ளுபடியின் அசல் தொகை ஏப்ரல் 2021 முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை வட்டியை அரசே ஏற்கும். அசல் வட்டியை அரசு ஏற்று தள்ளுபடி தொகையைக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.