தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதலே தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். இருப்பினும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் காரணத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலும் முக்கியமாக விவசாய நகை கடன், கல்விக் கடன் குறித்து தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நகை கடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே பல நலத் திட்டங்களையும் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. அந்த வகையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.