இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் செய்துள்ளோம் ஆனால், அவை எப்போது கிடைக்கும் எனத்தெரியவில்லை. எனவே போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நாளை திட்டமிட்டபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் உள்ளது. தடுப்பூசி வருகை குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.