மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். நாளை காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உருகிய நடைமுறையை பின்பற்றி ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.