தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆலோசனைப்படி அனைத்து பல்கலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டாலும், செய்முறை தேர்வுகள் நடைபெறும். கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். விடுமுறை காலத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்தார்.