Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு…? – வெளியான தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை  கொண்டு வரலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவீதத்துக்கும் மேலான பாதிப்பு இருந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |