Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் கரையை கடந்த போதிலும் இன்றும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை பற்றி மாணவர்களின் தலைமை ஆசிரியர்களை முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிய இடைவேளைக்குப் பிறகு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே செங்கல்பட்டு மாவட்டத்திலும் மதியத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |